இந்நிலையில் எனது படத்தின் ஹீரோயினை காணவில்லை என்று சலங்கை துரை பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: “என் படத்தில் ஹனிரோஸ் என்ற மலையாள ஹீரோயின் நடித்தார். ஆரம்பத்தில் ஒழுங்காக நடித்தவர் பிறகு கோளாறு செய்ய ஆரம்பித்தார். சூட்டிங் ஏற்பாடு செய்து விட்டு நடிக்க அழைத்தால் நான் பிசியாக இருக்கிறேன் வரமுடியாது என்று சொல்வார். எப்படியோ அவரை வைத்து படத்தை முடிச்சிட்டேன். இப்போது பட ரிலீசுக்கு வாருங்கள் என்று அழைத்தால் அவரது தந்தைதான் பேசுகிறார்.
என் மகள் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகையை நான் பார்க்கவும் இல்லை. போனில் பேசவும் முடியவில்லை. அவருக்கு முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். என் படத்தின் ஸ்டார் அட்ராக்ஷன் அவர்தான். இதனால் அவரை காணவில்லை கண்டுபிடித்து பட புரமோஷனுக்கு அனுப்புங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறேன்” என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி