இப்பட இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், “ஷங்கர் சார், முருகதாஸ் சார் இவர்களைப்போல பெரிய ஆட்கள் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் அமர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது.பொதுவாக நான் நடிக்கும் படங்களில், காமெடி நன்றாக இருக்கிறது, பாடல்கள் நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தில் கதை இல்லையே என கேள்வி கேட்பார்கள். ஆனால் அந்தக் கவலை இந்தப் படத்தில் எனக்கு இல்லை.
ஏனென்றால் இப்படத்தின் கதையை எழுதியிருப்பது முருகதாஸ் சார். முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை. இந்தப் படத்தின் கதை முருகதாஸ் என்றதும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.’மான் கராத்தே’ கண்டிப்பாக வெற்றிபெறும்” என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி