செய்திகள்,முதன்மை செய்திகள் வேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்!…

வேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்!…

வேகமாக சுருங்கி வரும் புதன் கிரகம்!… post thumbnail image
நாசா:-சூரிய குடும்பத்தில் புதன் ஒரு சிறிய கிரகமாகும், சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகம், பாறைகளால் ஆனது.இக்கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம், இரவு என்பது மூன்று மாதம், வெயில் 400 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், குளிர் மைனஸ் 173 டிகிரி.

இது சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, வேறு ஒரு சமயம் 70 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அமெரிக்காவின் நாசா கடந்த 2004ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008ம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராயந்து வருகிறது.

மெசஞ்சர் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் புதன் கிரகம் கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.புதன் கிரகத்தில் அதிக அளவு வெப்பமும் அதிக அள்வு குளிரும் மாறி மாறி நிலவுவதால் இந்த கிரகம் மிக வேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி