சென்னை:-‘மான் கராத்தே’ படத்திற்கு கதை எழுதி ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ நிறுவனத்துடன் அப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.”நானும் விஜய்யும் இணையும் படத்தின் இசைக்காக அனிருத்தை சந்தித்தபோது, உங்களுக்கு இசையில் என்னென்ன புதிய யோசனைகள் வருகிறதோ வேறு படங்களில் பயன்படுத்திவிடாதீர்கள்.
அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு என்னுடைய படத்தில் உபயோகப்படுத்துங்கள் என்று அனிருத்திடம் கூறியிருந்தேன்.ஆனால், ‘மான் கராத்தே’ பாடல்களைக் கேட்டபின்பு அனிருத் என்னை ஏமாற்றிவிட்டார் எனத் தோன்றுகிறது. இப்படத்தின் பாடல்களில் அனிருத் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். பாடல்கள் அருமையாக இருக்கிறது.
‘மான்கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, நான் அவரிடம் வேலை வாங்கியதைவிட அதிகமாக அவர் தான் என்னை வேலைவாங்கியிருக்கிறார். இப்போது அவர் படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி