இதற்கிடையே, காணாமல் போன விமானம் ரேடாரின் தொடர்பில் இருந்து அகன்ற நிலையில், சுமார் 4 மணி நேரம் வரையில் வானத்தில் சுற்றி திரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய பெருங்கடல் அல்லது வங்கக் கடல் பகுதியில் விமானம் விபத்துக்கு உள்ளாகி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்திய பெருங்கடல் பகுதியிலும், சென்னை கடற்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை விமானங்களும், கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில், மலேசியாவுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்காக தன்னுடைய கடற்படையின் அதிநவீன ரேடார் வசதியுடன் கூடிய பி3சி ஓரியன் விமானத்தை இப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தி உள்ளது.
மேலும், மலாக்கா கடல்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின், யுஎஸ்எஸ் கிட்டி போர்க்கப்பல், இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் அந்தமான் தீவுக்கு மேற்கு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, மலேசிய விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், ‘புதிய தகவலின்படி தேடுதல் பரப்பு விரிவாக்கப்பட்டு, இந்திய பெருங்கடல் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. காணாமல்போன விமானத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி