தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம் துவங்கி நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்தார். அவை சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் கவுதம்மேனனுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பண பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு கோர்ட்டு வரை சென்றது. தொடர்ச்சியாக கோர்ட்டும் அவர் சொத்துக்களை ஏலத்துக்கு விடுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கவுதம் மேனனுக்கு சொந்தமாக இந்திரா நகர் முதல் மெயின் ரோட்டில் 7 ஆயிரத்து 91 சதுர அடியில் சொத்து உள்ளது. இவற்றை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதை திருப்பி செலுத்தாததால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வருகிறது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 12.26 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி