இந்த விழாவில் ரஜினி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்திரன் படத்துக்கு பின் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அந்த படத்துக்கு ராணா என பெயரிட்டனர். ஆனால் பட பூஜையில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படம் நின்று போனது. அதன் பிறகு உடல் நிலை சரியான பிறகு சவுந்தர்யா இயக்கிய கோச்சடையானில் நடித்தார். இது 3டி மோஷன் பிக்சர்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.
ஏப்ரல் மாதம் இப்படம் ரிசீலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பிறகு ரஜினி கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இந்த படம் பற்றிய முழு தகவலையும் நாளை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி