இதனால் ஆவேசம் அடைந்த பா.ஜ.க.தொண்டர்கள் கருப்புக் கொடியுடன் ஆம் ஆத்மி கட்சியினர் சென்ற காரை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். அவர்களில் ஒருவர் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்த தடியால் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காரின் முன்பக்க கண்ணாடி மீது தாக்கினார்.இந்த தாக்குதலில் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் ஆம் ஆத்மி கட்சியினர் அந்த இடத்தை வெளியேறினர். இந்த தாக்குதலை பா.ஜ.க. தொண்டர்கள் தான் நடத்தினார்கள் என சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கானு கல்சாரியா தெரிவித்தார்.
இத்தனை அமளி நடந்த பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் சுக்தேவ் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி