“தோ்தலில் போட்டியிடுகிறோமா? இல்லையா? என்பது இப்போது முக்கிய பிரச்சினையில்லை. மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி வரும் மக்களவை தோ்தலில் பார்க்கலாம். நான் டெல்லியின் முதல்வராக இருந்தபோது ஷீலா தீட்சித் மீது காமன்வெல்த் ஊழல் தொடர்பாக வழக்கு தொடுத்தேன்.அந்த வழக்கு விசாரணையில் இருந்து காப்பாற்றவே ஷீலா தீட்சித்தை கேரள ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், விவசாயிகளுக்கு எதிரான காங்கிரசின் அணுகுமுறையை கண்டித்து அமைச்சர்களுடன் அமர்ந்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதனை இரட்டை நிலைப்பாடு என்று விமர்சித்துள்ள கெஜ்ரிவால், “நான் டெல்லியில் தர்ணா போராட்டம் செய்தபோது என்னை அராஜகவாதி என்று குற்றம்சாட்டிய பா.ஜனதா, இன்று தனது அமைச்சரவையுடன் அமர்ந்து தர்ணா செய்யப்போவதாக அறிவித்துள்ளது” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி