நான் நடித்த மூன்றாவது படம் ராகினி எம்.எம்.எஸ் 2 இந்த படம் திரையில் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.நான் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து உள்ளேன் .ஜாக்பாட் அதனை தொடர்ந்து ஜிஸம்-2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து நான் நடித்துள்ள மூன்றாவது படமான ராகினி எம்எம்2 வரும் மார்ச் 21 தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தில் திவ்யா தத்தா, பர்வீன் டாபா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரில்லான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் கதாபத்திரத்திற்க்கு ஏற்றார்போலவே நான் நடிப்பேன் என்று கூறினார்.படத்தின் கதாபாத்திரம் பற்றி எனக்கு தெரியாது. கதாபாத்திரகளில் நடிப்பது பற்றி இயக்குநர் தெரிவித்தால் அதை முழுமையாக படித்துவிட்டு நடிப்பேன் என்று சன்னி லியோன் தெரிவித்தார்.
படங்களில் மிகவும் செக்சியான வேடங்களில் நடித்தீர்களே அது உங்களுக்கு பயம் ஏதும் இல்லையா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சன்னி லியோன் கவர்ச்சியாக ஏன் நடிக்க கூடாது என கூறினார். கவர்ச்சியாக நடிப்பது தான் எனக்கு பிடிக்கும் என்று இது போன்ற படங்களில் நடிப்பது திரில்லாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என சன்னி லியோன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி