செய்திகள்,திரையுலகம் ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…

ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…

ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-எல்லா உச்ச நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்த்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த கேரக்டரைப் பற்றி அவரிடம் விசாரித்தால், சென்னை தமிழில் கொச்சையாக பதில் அளித்தார் .

கேரளாவில் பிறந்து சென்னை கான்வென்ட் பள்ளியில் படிப்பை முடித்த சரண்யாவிடம் இதை எதிர்பார்க்காததால், அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கான பதிலை டைரக்டர் ராஜபாண்டி சொன்னார். ‘இந்த படத்தில் அவர் சென்னையை சேர்ந்த ஒரு குடிசை பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்க உள்ளார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழை கற்று கொண்டார், அது மட்டுமல்லாமல் அந்த பாஷையில் வெளுத்து கட்டி கொண்டு இருக்கிறார் ”.‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசை பகுதியில் நடந்தது. இடைவிடாமல் ஐந்து நாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவ சாலியான, தேசிய விருது பெற்ற சரண்யா எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார்

அவருடன் அந்த காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார். கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி . நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த் .
ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர் தான் என்பதை நிரூபித்து , தேசிய விருது பெற்ற நடிகையடமே பாராட்டு பெற்றார் விஜய் வசந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி