மணிரத்னம் படத்தில் மிக முக்கிய அம்சமாக விளங்குவது ஒளிப்பதிவு. இதுவரை அவர் மிகபிரபலமான ஒளிப்பதிவாளர்களை மட்டுமே தனது படத்தில் பயன்படுத்தியுள்ளார். தளபதி, இருஅர், தில்சே, ராவணன் போன்ற படங்களுக்கு சந்தோஷ் சிவனும், நாயகன், மெளனராகம், அக்னி நட்சத்திரம், அலைபாயுதே போன்ற படங்களுக்கு பி.சி.ஸ்ரீராமும், பம்பாய், குரு, கடல் போன்ற படங்களுக்கு ராஜீவ் மேனனும், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு ரவி கே.சந்திரனும், அஞ்சலி படத்திற்கு மது அம்பாட் அவர்களும், பணிபுரிந்துள்ளனர். மணி ரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்தின் கேமராமேனான பணியாற்றியவர் பாலுமகேந்திரா எனபது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது புதிய படத்திற்கான ஒளிப்பதிவாளரை தற்போது தேர்ந்தெடுத்துவிட்டார். அவர்தான் ரவிவர்மன். இவர் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இவர் பணிபுரிந்த தசாவதாரம் படத்தை பார்த்துதான் தற்போது இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் மணிரத்னம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி