பாவனா மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடிப்பதற்கு சில படங்களில் கமிட் ஆகியிருப்பதால் திருமணத்தை இரண்டு வருடங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாக நேற்று பாவனாவின் தாயார் நிருபர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன், பாவனாவிடம் குறிப்பிட்ட தேதியில் திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என்றும், பாவனா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதே தேதியில் வேறு பெண்ணுடன் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தற்போது பாவனாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாயின் பேச்சைக் கேட்டு படங்களில் தொடர்ந்து நடிப்பதா? அல்லது காதலித்தவரை கைப்பிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார். இதனால் கேரள திரைப்படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி