செய்திகள்,திரையுலகம் பொது இடத்தில் நடிகையின் மார்பை பிடித்த ரசிகருக்கு சிறை?…

பொது இடத்தில் நடிகையின் மார்பை பிடித்த ரசிகருக்கு சிறை?…

பொது இடத்தில் நடிகையின் மார்பை பிடித்த ரசிகருக்கு சிறை?… post thumbnail image
சிட்னி:-பிரபல அமெரிக்க நடிகை சாரா ஹைலாந்த் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க கூடினர்.

ஒரு ரசிகர் சாரா ஹைலாந்த் அருகில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார். அதற்கு ஒப்புக்கொண்ட சாரா ஹைலாந்த், புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த ரசிகர் திடீரென நடிகையின் மார்பகத்தை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக அந்த ரசிகரை கைது செய்த ஆஸ்திரேலிய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது பொது இடத்தில் பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்த சட்டப்பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.29 வயதான அந்த ரசிகரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

1990ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த சாரா ஹைலாந்த், என்ற நடிகை Modern Family, Geek Charming, போன்ற பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருடைய டிவி சீரியல்களின் டிவிடிகள் உலகம் முழுவதும் விற்பனையாகி வசூலை குவித்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி