சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா அவர்களின் தாயார் நேற்று திடீரென மரணம் அடைந்தார். ரஹ்மான் தனது டுவிட்டரில் ‘மதிப்புமிகுந்த எனது மாமியார், தனது மகள்,பேரக்குழந்தைகள் மற்றும் என்னையும் விட்டுவிட்டு இந்த பூவுலகை விட்டு மேலுலகம் சென்றடைந்துவிட்டார்.
அவருக்கு அல்லா நிரந்தர அமைதியான ஒரு இடத்தை கொடுப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.திரையுலக பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மாமியார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மானின் மாமியார் leukaemia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதன் காரணமாக அவரது மரணம் நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது. மாமியார் மரணம் காரணமாக Infinite Love என்ற படத்தின் புரமோஷனுக்காக சிங்கப்பூர் செல்லவிருந்த தனது பயணத்தை ரஹ்மான் ரத்து செய்துவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி