இந்நிலையில் பாரதீய ஜனதாவுக்கு போட்டியாக காங்கிரசும் ராகுல் பெயரில் பால்பூத்துக்கள் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் தொண்டர்கள் மோனு சக்ஷேனா, மனோஜ் சுக்லா ஆகியோர் பால் புத்துக்களை ராகுல் காந்தி பெயரில் தொடங்கி பால் சப்ளை செய்கிறார்கள்.மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் இந்த பூத்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்களில் பால் விநியோகம் செய்தனர். அந்த கப்களில் ராகுல் காந்தி படம் இடம் பெற்று இருந்தது.இதே போல் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பும் காங்கிரசார் ராகுல் காந்தி பெயரில் பால் விற்பனை நிலையங்கள் தொடங்கி உள்ளனர்.
‘ராகுல் மில்க்’ என பெயரிட்டு விநியோகிக்கிறார்கள். பால் கப்களில் ராகுல் காந்தி உருவப்படம் இடம்பெற்றுள்ளது. கோரப்பூர் மாவட்டத்தில் 19 வட்டாரங்களில் ராகுல் பால் பூத்துக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத்திலும் 50 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
டீ விஷத்தன்மை கொண்டது. அது உடல் நலனுக்கு கேடு, பால் சாப்பிட்டால் நம் நாட்டு இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதற்காக இந்த பால் பூத்கள் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி