ஒரு நாட்டின் பிரதமரையே கொலை செய்தவர்களை விடுவித்துவிட்டால், பிறகு எப்படி சாமானியனுக்கு நீதி கிடைக்கும். ராஜீவ் காந்தி என் தந்தை என்பதற்காக இதை சொல்லவில்லை, நாட்டிற்கும் நாட்டு நலனுக்காகவே சொல்கிறேன். மரண தண்டனைக்கு காங்கிரஸ் கட்சி எப்போதுமே எதிரானதுதான். ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய குற்றங்கள் செய்தவர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.
ராகுல்காந்தியின் இந்த கருத்தால் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னும் கைது செய்யப்படாத குற்றவாளிகள் பலர் வெளியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை விமர்சனம் செய்வதன் மூலம் ராகுல்காந்தி நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி