பிரியதர்ஷனின் சில நிறுவனங்களை லிசி கவனித்துக்கொள்கிறார். இதில் ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே பிரியதர்ஷனுக்கும் லிசிக்கும் இடையே பிரச்னை எழுந்ததாகவும் இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து கம்பெனிகளை நிர்வகித்த தனது பணிகளுக்காக ரூ.80 கோடியை பிரியதர்ஷனிடம் லிசி கேட்டதாகவும் பேச்சு எழுந்தது. இந்த பிரிவு குறித்து பிரியதர்ஷன் சமீபத்தில் கூறுகையில், நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இருக்கிறோம். பிரச்னை ஏதும் இல்லை என்றார்.
ஆனாலும் லிசி அவருடன் சேர்ந்து வாழவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷனுடன் சேர்ந்திருக்கிறார் லிசி. இது குறித்து அவர் கூறுகையில், எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இப்போது சேர்ந்துவிட்டோம். கம்பெனி தொடர்பாக எழுந்த சில பிரச்னைகள்தான் எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. ஈகோ எங்களை ஆட்டிப்படைத்ததும் இதற்கு ஒரு காரணம். இப்போது அதையெல்லாம் மறந்து நாங்கள் இணைந்துள்ளோம். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி