அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…

தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!…

தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

ராஜீவ்காந்தியை படுகொலை செய்ய நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் எந்த ஒரு அரசு அல்லது கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது.ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடாது. ஏனெனில் அந்த செயல் நீதியின் அனைத்து கொள்கைகளுக்கும் எதிரானது.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரப்படக்கூடாது.இதுபற்றி மத்திய அரசு, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் விடுதலை நடவடிக்கை எந்த விதத்திலும் தொடரக் கூடாது.இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி