செய்திகள்,திரையுலகம் காதல் பற்றி பேச விரும்பவில்லை – ஹன்சிகா…

காதல் பற்றி பேச விரும்பவில்லை – ஹன்சிகா…

காதல் பற்றி பேச விரும்பவில்லை – ஹன்சிகா… post thumbnail image
சென்னை:- சிம்புவுடனான காதல் பற்றி பேச விரும்பவில்லை என்று ஹன்சிகா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த வருடம் பிசியாக இருக்கிறேன். அதிக படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது 22 வயதில் இவ்வளவு பிசியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இன்னும் 5 வருடம், 10 வருடம் நீங்கள் பீல்டில் இருப்பீர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி கவலையில்லை.

ஒவ்வொரு நாளையும் நான் எண்ணிக்கொண்டு இருக்க முடியாது. தமன்னா, சமந்தா போன்ற நடிகைகளுடனான போட்டி எப்படியிருக்கிறது என்று கேட்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். இப்போது கூட என் கையில் பத்து படங்கள் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு நான்தான் போட்டி. வேறு யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.ஒருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என நினைத்தால் உடனடியாக அவர்களுக்கு போன் செய்து பாராட்டுவேன். அவ்வளவுதான். சிம்புவுடனான உங்கள் காதல் முறிந்துவிட்டதாமே? என்கிறார்கள்.

இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்கிறேன். பார்க்கிற எல்லோரும், எப்போது கல்யாணம் என்றுதான் கேட்கிறார்கள். எனக்கு சவுகரியமாக இல்லாத விஷயங்கள் பற்றி எப்போதும் பேச விரும்புவதில்லை.சரியான நேரம் வரும்போது அதுபற்றி கண்டிப்பாகப் பேசுவேன். 15 வயதில் நான் நடிகை ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நடந்தது. அதைப் போல, நேரம் வரும்போது எனக்கும் என் அம்மாவுக்கும் சரி என தோன்றும் போது நான் திருமணம் செய்வேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி