செய்திகள் ஒபாமா படத்துடன் அமோக விற்பனையாகும் போலி ‘வயாகரா’ மாத்திரைகள்!…

ஒபாமா படத்துடன் அமோக விற்பனையாகும் போலி ‘வயாகரா’ மாத்திரைகள்!…

ஒபாமா படத்துடன் அமோக விற்பனையாகும் போலி ‘வயாகரா’ மாத்திரைகள்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-ஆண்களின் பாலியல் உணர்வுகளை தூண்டி கிளர்ச்சியை ஏற்படுத்தும் ‘வயாகரா’ மாத்திரைகளுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து சிலர் போலி வயாக்ரா மாத்திரகளை வரவழைத்து, பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களில் விற்று கொழுத்த லாபம் சம்பாதித்து வருகின்றனர்.4 மாத்திரைகள் கொண்ட அட்டை சுமார் 60 ரூபாய்க்கு இப்பகுதிகளில் விற்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த போலி வயாக்ரா மாத்திரை பெட்டிகளில் அமெரிக்க அதிபர் ஒபாமா ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணியில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற படம் அச்சிடப்பட்டுள்ளது என்பதுதான்.

வலிமை மற்றும் அதிகாரத்தின் அடையாளம்’ என்ற அடைமொழி வாசகத்துடன் பாகிஸ்தானில் இந்த போலி வயாகரா மாத்திரைகள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி