வாணியம்பாடி:-பெங்களூர் சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 30). கன்னடபட சினிமா டைரக்டர். இவரது இயக்கத்தில் உக்ரம் என்ற கன்னட சினிமா படம் வருகிற சனிக்கிழமை வெளிவர உள்ளது.
இதுசம்பந்தமாக பிரசாந்த் நேற்று சென்னை வந்தார். இன்று அதிகாலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். டிரைவர் மஞ்சுநாத்(28). என்பவர் காரை ஓட்டினார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னாள் சென்ற லாரி மீது கார் திடீரென மோதியது.
இந்த விபத்தில் டைரக்டர் பிரசாந்த், டிரைவர் மஞ்சுநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி