சிம்பு ஹன்சிகா காதல் முறிவுக்கு முழுக்காரணம் நயன் தாராதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். நயனுடன் சிம்பு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் அதுவரை ஓரளவிற்கு அவர்களது காதல் சமாதானத்தாக் போய்க்கொண்டிருந்தது என்று கூறுகின்றனர்.சிம்பு தங்கையின் திருமணத்திற்கு ஹன்சிகா கண்டிப்பாக வருவார் என பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஹன்சிகா கடைசிவரை வரவில்லை.
அதுபோல காதலர் தினத்தன்று இருவரும் கண்டிப்பாக சந்திப்பார்கள் என்று செய்திகள் கசிந்தது. சமீபத்தில் பேட்டியளித்திருந்த சிம்பு, நயன் தாரா என்னுடைய தோழிதான், ஹன்சிகாதான் என் காதலி என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஹன்சிகா காதலர் தினத்தன்று சிம்புவை சந்திக்கவே இல்லை. இன்று டுவிட்டரில் காதல் முறிவு குறித்தும் பதிவு செய்திருப்பதால் இந்த காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி