அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…

கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…

கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா… post thumbnail image
நியூடெல்லி:-மக்களவையில் நேற்று மதியம் 3 மணிக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சமர்ப்பித்த தெலுங்கானா மசோதா குறித்த விவாதத்தை தொடங்க சபாநாயகர் மீராகுமார் என அறிவித்தார். அந்த சமயத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்த அவர் உத்தரவிட்டார்.

மசோதா மீது உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஜெய்பால் ரெட்டி ஆகிய மூன்று பேர் மட்டுமே விவாதம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தெலுங்கானா மசோதா நிறைவேறியது. பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தெலுங்கானாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததால் தெலுங்கானா மசோதா நிறைவேறியது. ஆனாலும் ஐதராபாத்தை தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற திருத்தம் தோல்வியடைந்தது.

தெலுங்கானா மசோதா நிறைவேறியதை அடுத்து தெலங்கானா ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆந்திர பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இன்று முழு அடைப்பிற்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி