செய்திகள்,திரையுலகம் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி…

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி…

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி… post thumbnail image
சென்னை:-கஹானி தமிழ் ரீமேக் படமான ‘ நீ எங்கே என் அன்பே‘ படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, ஒரு நாட்டின் அரசியல் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டாகிய லீடர் திரைப்படத்தின் கதையை எழுதும்போது தான் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாகவும், அதை ரஜினி நடிக்க சம்மதித்தால் மட்டுமே தமிழில் இயக்க விரும்புவதாகவும் கூறினார். லீடர் கேரக்டரில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகர் நடித்தாலும், படம் சொதப்பிவிடும் என்று கூறிய சேகர், ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதக்கூடிய சக்தியுள்ள ஒரே நடிகர் ரஜினிதான் என்று புகழாரம் சூட்டினார்.

லீடர் படத்தின் தமிழ் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அதை தெலுங்கில் தயாரித்த ஏ.வி.எம் சரவணன் சாரிடம் காண்பித்தபோது அதை பார்த்து பாராட்டியதாகவும், இதுகுறித்து தான் ரஜினியிடம் பேசுவதாகவும் கூறினார். தெலுங்கு லீடர் படத்தில் ராணா, ரிச்சா கங்கோபத்யா, ப்ரியா ஆனந்த், சுஹாசினி, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி