புதுடெல்லி:-இந்தியாவின் பாரம்பரியம் மிக்க சிறந்த நகரத்துக்கு இந்திய சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில், கடந்த (2012-2013) ஆண்டுக்கான பாரம்பரியம் மிக்க சிறந்த நகரமாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி மலைக்கோவில் திருப்பதி நகரின் திருமலையில் அமைந்துள்ளது.இந்த கோவிலை தரிசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பக்தர்கள் திருப்பதி நகரத்துக்கு வந்து செல்வதும், ரூ.2 ஆயிரத்து 250 கோடி வருமானத்துடன் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோவிலாக திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாளை புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரத்துக்கான விருது திருப்பதி நகரத்துக்கு வழங்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி