புதுடெல்லி:-பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்.பி. பதவிக்கு போட்ட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பத்திரிகையாளரான ஜர்னைல் சிங் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் இருந்து ஜகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அப்போதைய மத்திய உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்திடம் ஜர்னைல் சிங் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில் திருப்தியடையாத சீக்கிய மதத்தை சேர்ந்த ஜர்னல் சிங், தனது காலில் அணிந்திருந்த ‘ஷு’வை கழற்றி அவர் மீது வீசினார். வீசப்பட்ட ‘ஷு’ ப.சிதம்பரம் மீது படாமல் அவர் அருகில் விழுந்தது.இச்சம்பவத்தின் போது பிரபல இந்தி நாளிதழான ’தைனிக் ஜக்ரன்’ நிருபராக பணியாற்றிய ஜர்னைல் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு டெல்லி தொகுதிக்கான எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

புதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் இருக்கும் என்பது பற்றி ஏ.சி.நீல்சன் மற்றும் ஏபிபி நியூஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. டெல்லி, மும்பை–தானே, குர்கான்–பரீதாபாத், காசியாபாத்–நொய்டா ஆகிய இடங்களில் இந்த கருத்து கணிப்பு நடந்தது.அதில் டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதியில் 6 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும்…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில் எடியுரப்பா போன்ற ஊழல் குற்றச்சாட்டு நபர்கள் உள்ளனர். ஆனால் மற்றொரு பக்கத்தில் ஆம் ஆத்மி உள்ளது. இந்த கட்சி நேர்மையான அரசியலை நடத்துகிறது. ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க.க்…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் சுமார் 400 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தற்போதைய எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு வாக்காளர்களை கவர ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது. அதன்படி பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க…