அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் கடந்த 14–ந்தேதி ராஜினாமா செய்தார்.

சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த அவர் துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்தார். ஆனால் கெஜ்ரிவால் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் சட்ட மன்றத்தை கலைக்காமல் முடக்கி வைக்கவும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும், சட்டமன்றத்தை முடக்கி வைக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. சட்டசபை முடக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி