செய்திகள் காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…

காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…

காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண ஜெயிலில் 40 வயது Joseph Andrew Dekenipp என்பவர் திருட்டு குற்றங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது காதலியை சந்திப்பதற்காக ஜெயிலில் இருந்து இரண்டு மிகப்பெரிய சுவர்கள், மற்றும் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த மின்வேலி ஆகியவற்றையும் தாண்டி தப்பிச்சென்றுவிட்டார்.ஜெயிலில் இருந்து Joseph Andrew Dekenipp தப்பியதை தொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். தப்பிய Joseph Andrew Dekenipp, நேராக ஒரு சலூனுக்கு சென்று தனது முகத்தை அழகாக மாற்றிக்கொள்வதற்காக ஃபேஷியல் செய்துகொண்டிருந்தபோது போலீசாரால் பிடிபட்டு, மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சிறிய குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் மீது தற்போது ஜெயிலில் இருந்து தப்பிய குற்றப்பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடைசிவரை அவர் தன் காதலியை பார்க்க நினைத்த ஆசை நிறைவேறவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி