அரசியல்,செய்திகள் ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…

ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…

ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!… post thumbnail image
புதுடில்லி:-பார்லி.யின் கடைசி கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் காங். கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 11-வது எம்.பி.யாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்(41), கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அப்போது சில வாக்குறுதி கொடுத்தார்.

பார்லி.யின் இரு சபைகளிலும் உள்ள எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டு தோறும் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கியு்ள்ளது. இந்த நிதி மூலம் எம்.பி.க்கள் தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வர்.கடந்த 2012-ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வான சச்சின் இதுவரை நடந்த பார்லி. கூட்டங்களில் ஓரிருமுறை கலந்துகொண்டார். ஆனால் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. எம்.பி.என்ற முறையில் விவாதம் நடத்தவில்லை.

இது தொடர்பாக ராஜ்யசபா இணையதளத்தில் இதுவரை எம்.பி.யாக சச்சின் பங்கேற்றது குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில் எம்.பி.யாக இதுவரை அவர் ஒரு கேள்வி கேட்டதில் சபை குறிப்புகளில் இல்லை. மும்பை புறநகர் பகுதியில் சச்சினின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சிக்காக இதுவரை ரூ. 10 கோடி நிதிஒதுக்கப்பட்டிருந்தது. இதனை உரிய முறையில் செலவிட சச்சின் முயற்சியோ,நடவடிக்கையே மேற்கொள்ளவில்லை.இதனால் இரண்டு ஆண்டுகளி்ல் ரூ. 10 கோடி நிதி அப்படியே உள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் இவரது செயல்பாடுகள் பூஜ்யம் என்றே உள்ளது. இவ்வாறு அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரைப் போன்றே நடிகை ரேகா, பாடலாசியர் ஜாவியத்அக்தர் உள்ளிட்டோர் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்ற நாள் முதல் பார்லி.யில் கேள்வி எதுவும் கேட்கவில்லை. விவாதமும் நடத்தவில்லை. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதி கேட்டு அரசிடம் வலியுறுத்தவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி