சீனாவில் நம் நாட்டைப் போன்று மணமகனுக்கு பெண் வீட்டார் வரதட்சணை அளிக்கும் முறை இல்லை. அங்கு ஒரு குழந்தை சட்டம் பல ஆண்டுகளாக அமலில் இருப்பதால், ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் பலருக்கு திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைப்பதில்லை.அதனால் வசதியான இளைஞர்களையே பெண்களும் விரும்புகின்றனர். காதலியின் தாய் போட்ட நிபந்தனையில் அதிர்ச்சி அடைந்தாலும், சென் மனம் தளரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்தார். அதன் மூலம் 2 லட்சம் யுவான் (சீன நாட்டுப் பணம்) சேர்த்து விட்டார்.
நேற்று காதலர் தினம். கடந்த 12ம் தேதி காதலியின் பிறந்த நாள். அன்று வித்தியாசமான பரிசை காதலிக்கு வழங்க நினைத்தார் சென். உடனே, தான் சேர்த்து வைத்திருந்த 2 இலட்சம் யுவான் நோட்டுக்களில் ரோஜா பூக்கள் செய்ய தொடங்கினார்.கடந்த 8ம் தேதி முதல், ரூபாய் நோட்டுக்களில் ஒவ்வொரு ரோஜாவாக செய்தார். ரோஜாக்கள் தயாரிப்பதற்கு நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்களும் உதவி செய்தனர். மொத்தம் 999 ரோஜாக்களை செய்து 12ம் தேதி காதலிக்கு பரிசாக வழங்கினார். பின்னர் காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார் சென். அதை காதலியும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி