செய்திகள் காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…

காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…

காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி… post thumbnail image
கிருஷ்ணகிரி:-காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தட்வெப்பநிலை மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் உள்ளது. இங்கு 500 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கிருந்து பெருநகரங்களுக்கு மட்டுமின்றி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் அரேபிய நாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இந்த ஆண்டு சீனாவில் ரோஜா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு உள்ளதாக விவ சாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக தாஜ்மஹால், ரெட் ஜயன்ட், கஞ்ஜன் ஜங்கா, ரெட் ரோஸ், மிக்ரா, சிவப்பு ரோஜா ஆகிய ரகங் களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி