அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…

‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…

‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!… post thumbnail image
புதுடில்லி:-பார்லிமென்ட்டிற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. இந்நிலையில் ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி மற்றும் இடைக்கால (மினி) ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இதனை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் 72 புதிய ரயில்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் கார்கே பேசுகையில், கடந்த 8 மாதங்களில் பல புதிய ரயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் ரயில்வே திட்டம் ஒரு புதிய சாதனை; ரயில்வே துறையில் 6வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை மேம்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. 2014 – 15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும், 2014-15-ம் ஆண்டு 1101 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 17 பிரீமியம், 38 எக்ஸ்பிரஸ், 10 பயணிகள், 4 எலக்ரிக் மற்றும் 3 டீசல் இன்ஜின் ரயில் உட்பட புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றார்.

தமிழகத்திற்கு புதிய ரயில்கள் : தமிழகத்துக்கு 2 பிரிமியர் ரயில்கள், 3 பாசஞ்சர் ரயில்கள், 4 விரைவு ரயில்கள் உள்ளிட்ட 9 ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பட்ஜெடின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புக்களும் :

* பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு இல்லை;

* 10 பயணிகள் ரயில், 7 மின்சார ரயில்கள் உள்ளிட்ட 72 புதிய ரயில்கள் அறிமுகம்;

* 17 அதிக கட்டணத்துடனான பிரிமியம் ரயில்களும், 38 விரைவு ரயில்களும் இயக்கப்பட உள்ளன;

* ரயில் சேவையை மேம்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது; 2014 – 15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும்;

* ரயில்வே துறையில் 6வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது;

* 2,027 கி.மீ., நீளமுள்ள இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன; 2,227 கி.மீ., தூரமுள்ள இருப்புப் பாதைகள் இரட்டைப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன;

* கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட 2207 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 2000 கி.மீ., வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது; இதற்காக 1288 டீசல் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டுள்ளன

* ரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது.

* தீ விபத்தை தடுக்க ரயில் பெட்டிகளில் தீ அணைப்பு கருவி வைக்கப்படும்;

* ரயில் சமையறையில் மின்சார அடுப்பு மூலம் உணவுகள் சமைக்கப்படும்;

* முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்களை மொபைல் போன்கள் மூலம் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது;

* குறிப்பிட்ட சில ரயில்களில் உணவுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்;

* திட்டமிட்ட திண்டினம்- நகரி இருப்புப் பாதையை புதுச்சேரி வரை நீட்டிக்க ஆய்வு நடத்தப்படுகிறது.

* சேலம்- ஓமலூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும்;

* வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்.

உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி