செய்திகள் எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…

எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…

எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?… post thumbnail image
சென்னை:-சென்னை பாரிமுனையில் NSC போஸ் சாலையில் ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இது எம்.ஜி.ஆரின் உடல்நலத்திற்காக வேண்டப்பட்டு கட்டப்பட்ட கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் பூஜை நடத்தி நூற்றுக்கணக்கானோர் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோவில் நடைபாதையில் உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, கோவிலை இடிக்க உத்தரவிட்டார். ஆனாலும் இந்த கோவில் இடிக்கப்படவில்லை.

எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்தார் டிராபிக் ராமசாமி. இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி வழக்கறிஞர் இதுகுறித்து பதில் தெரிவிக்க 2 வார காலம் அவகாசம் கேட்டதை தொடர்ந்து அவர்களுக்கு அவகாசம் கொடுத்தார். நீதிபதி.இன்னும் இரண்டு வாரங்களில் இந்த கோவில் இடிக்கப்படுமா? என்ற அச்சத்தில் இந்த பகுதி மக்கள் இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி