பிறகு நான்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இது அவரால் எழுதப்பட்ட தற்கொலை கடிதமா? என்ற சந்தேகம் இருக்கிறது. தற்செயலாக அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது தற்கொலையா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க 8 வாரம் முதல் 10 வாரம் ஆகலாம். அதன்பிறகே நான்சியின் சாவு குறித்த மர்மம் அகலும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையில் நான்சியின் மரணம் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக நடிகை ஜூலியா, நடிகர் எரிக் மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி