அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார். சென்னையில் இருந்து சென்ற நடன கலைஞர்களுடன் சூர்யா, சமந்தா ஆட இக்காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.
அப்போது மும்பையைச் சேர்ந்த இந்தி நடன கலைஞர்கள் கும்பலாக அங்கு வந்தனர். படப்பிடிப்பை நிறுத்தும்படி ஆவேசமாக கத்தியபடி கலாட்டாவில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு சாதனங்களை உடைக்கவும் பாய்ந்தனர். இதனால் படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது.
நடன கலைஞர்கள் முப்பது சதவீதம் பேரை மும்பை நடன கலைஞர்கள் சங்கத்தில் இருந்துதான் பணியாற்ற தேர்வு செய்ய வேண்டும். வெளியாட்களை வைத்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.இதையடுத்து அஞ்சான் படக்குழுவினர் ரூ.60 ஆயிரம் அபராத கட்டணம் செலுத்தினார்கள். அதன்பிறகே படப்பிடிப்பை தொடர அவர்கள் அனுமதி அளித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி