செய்திகள்,திரையுலகம் நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்…

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்…

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்… post thumbnail image
கொச்சி:-‘ரன்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் ‘விஞ்ஞானி’ என்ற படத்திலும், மலையாளத்தில் ‘இதுக்கப்புறம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் துபாயில் என்ஜினீயராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை நாளை (12–ந் தேதி) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறினார்.ஆனால் ஆலயத்தில் திருமணம் நடக்கும் முன்பே நேற்று முன்தினம் இரவு கொச்சியில் உள்ள மீராஜாஸ்மின் வீட்டில் அவருக்கும், அனில் ஜான் டைட்டசுக்கும் திடீரென ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்காக சார்பதிவாளர் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.

இதற்காக கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மினும், அனில் ஜான் டைட்டசும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அனில் ஜான் டைட்டஸ்–மீராஜாஸ்மின் இருவரும் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி இவர்களின் திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் நாளை (12–ந் தேதி) காலை 11 மணிக்கு நடக்கும் என அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருமணத்துக்கு பிறகும் மீராஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. மீராஜாஸ்மினை திருமணம் செய்து கொண்ட அனில் ஜான் டைட்டஸ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டைட்டஸ் – சுகுதகுமாரி.
அனில் ஜான் டைட்டஸ் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்தவர். தற்போது துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி