செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு… post thumbnail image
சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

வருகிற 28–ந்தேதி சென்னையில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த விழாவில் ரஜினி மற்றும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே கலந்து கொள்கின்றனர்.மேலும் ‘கோச்சடையானில்’ முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி, விஜயகுமார், ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் கலந்து கொள்கின்றனர்.‘கோச்சடையான்’ படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி போன்ற மொழிகளில் ரிலீசாகிறது. 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியீடுகிறார்கள்.

கமலின் ‘விஸ்வரூபம் 2’, விக்ரமின் ‘’, விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’, தனுசின் ‘வேலை இல்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படங்களை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ‘கோச்சடையான்’ வருவதால் இவற்றின் ரிலீசை தள்ளி தள்ளிவைப்பது பற்றி பரிசிலீக்கின்றனர்.‘கோச்சடையான்‘ ‘அவதார்’, ‘டின்டின்’ போன்று அனிமேஷன் படமாக தயாராகியுள்ளது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி