இந்திய அணி கடைசியாக 2011–ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் 63 ரன்னில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் இதுவரை வெற்றி பெறவில்லை. 10 டெஸ்டில் தோற்றது. 3 டெஸ்டில் (வெஸ்ட் இண்டீஸ் 2, தென் ஆப்பிரிக்கா 1 டிரா செய்தது.
இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் தோற்றது.இந்த 10 தோல்விகளும் டோனி தலைமையில்தான் கிடைத்தது. அதற்கு முன்பு அவரது தலைமையிலான அணி 2010–ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோற்றது.
கேப்டன் டோனியின் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 11 டெஸ்டில் தோற்றுள்ளது. இது மோசமான நிகழ்வாகும். இதற்கு முன்பு கங்குலி, பட்டோடி, அசாருதீன் ஆகியோர் தலைமையில் வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி தலா 10 டெஸ்டில் தோற்று இருந்தது.அதற்கு அடுத்தபடியாக பிஷன்சிங் பெடி 8 டெஸ்டிலும், கவாஸ்கர், தெண்டுல்கர் தலா 6 டெஸ்டிலும் வெளிநாட்டில் தோற்று இருந்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி