பிகானர்:-ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை அங்கு பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் சென்றபோதுதான், எந்திரம் திருட்டு போனது தெரியவந்தது. அதில் 8600 ரூபாய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் நான்கு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், எந்திரத்தை பெயர்த்து ஏற்றிச் சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி