செய்திகள் பி. எஃப் வாடிக்கையாளர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ – மத்திய அரசு உத்தரவு…

பி. எஃப் வாடிக்கையாளர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ – மத்திய அரசு உத்தரவு…

பி. எஃப் வாடிக்கையாளர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ – மத்திய அரசு உத்தரவு… post thumbnail image
புதுடெல்லி:- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பி. எஃப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பி. எஃப் கணக்கு எண்ணும் மாற்றப்படும். இதனால் அந்த தொழிலாளிக்கும் நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பி. எஃப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பி. எஃப் சந்தாதாரர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பி. எஃப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, பி. எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மத்திய அறக்கட்டளை வாரிய (சிபிடி) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் அமைச்சக செயலாளர் கவுர்குமார் உத்தரவிட்டதாக பி. எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன. நிரந்தர கணக்கு எண் வழங்கும் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும் என்று பி. எஃப் ஆணையர் கே.கே.ஜலாலை தொழிலாளர் துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தை 2014 – 2015ம் ஆண்டில் செயல்படுத்துவதில் எந்த சங்கடமும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகமான தகவல்கள் :

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி