செய்திகள்,தொழில்நுட்பம் சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்…

சூரியனை ஆராய்ச்சி செய்ய இந்தியா ஏவும் புதிய செயற்கைகோள்… post thumbnail image
சேலம்:- சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சூரியனின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்ய வரும் 2017-18ம் நிதியாண்டில் ஆதித்யா செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்றும் சந்திராயன் விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது சந்திராயன்-2 திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலம் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும்.

சந்திரன், செவ்வாய் ஆராய்ச்சியை அடுத்து சூரியனின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆதித்யா செயற்கைகோள் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோள், சூரியனை விட்டு சற்று தூரத்தில் பூமியின் ஈர்ப்பு விசைக்கும், சூரியனின் ஈர்ப்பு விசைக்கும் ஏதுவாக உள்ள இடத்தில் நிறுவப்படும். ஒரு பக்கம் பூமி, மறுபக்கம் சூரியன் என்ற அந்த இடத்தில் இருந்து சூரியனின் இயக்கத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். இந்த ஆதித்யா செயற்கை கோள், வரும் 2017-18ம் நிதியாண்டில் விண்ணில் ஏவப்படும். அதற்கான பணியை மேற்கொண்டுள்ளோம். .இவ்வாறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய செயல்திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி