கடந்த மூன்று வருடங்கள் என் வாழ்க்கையில் மிக கடினமானவை. அகம் புறம் படத்துக்குப் பிறகு சின்ன இடைவெளி கிடைத்தது. அடுத்தப் படத்துக்கு லேட்டானது. அதற்குள் பாக்கி இருக்கிற எம்பிஏவை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பிட்டேன். என் தந்தைக்கு இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிசினஸ் இருக்கிறது. அவருக்குப் பிறகு அதை நான்தான் கவனித்தாக வேண்டும். அதற்கு எம்பிஏ படிப்பு முக்கியம். அதான் படிக்கப் போனேன். இரண்டு வருடம் படித்து முடித்தேன். மறு வருடமே அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. படுக்கையில் விழுந்துட்டார். ஒரே நேரத்தில் அவரையும், அவருடைய பிசினசையும் கவனிக்க வேண்டியதாகிவிட்டது. இரண்டு பெரிய பொறுப்பு தலையில் விழுந்ததும் தவித்துப் போய்விட்டேன். இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பறந்து பறந்து அப்பாவையும் பிசினசையும் பார்த்துக் கொண்டேன். இப்போது அப்பா குணமாகிவிட்டார். அதனால் நடிக்க வந்துவிட்டேன்… என்றார்.
ஒல்லியா அழகா இருந்தீங்க? இப்போ இவளோ வெயிட் போட்டிருக்கீங்களே?உண்மைதான். படிப்பையும் அப்பாவையும் கவனித்தவள் என் உடலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 24 மணி நேரமும் படிப்பு, மாசத்துக்கு ரெண்டு முறை ஆஸ்திரேலியா டூர். மூணு வருடங்களும் ஹோட்டல் சாப்பாடு, ஜிம்முக்கு போக முடியல. டயட் கன்ட்ரோல் பண்ண முடியல. அதான் வெயிட்டாயிடுச்சு. இப்போ நான் நடிக்கும் வில்லங்கம் படத்துக்கு இந்த வெயிட் தேவை என்று டைரக்டர் சொல்லிவிட்டார். அதனால் இதே தோற்றத்தோடு நடிக்கிறேன். இன்னும் 3 மாதம்தான். பிறகு பழைய மீனாட்சியை பார்க்கலாம்.
வில்லங்கம் படத்தில் என்ன கேரக்டர்?ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையைச் சொல்லும் கதை. அந்தப் பெண் நான்தான். பள்ளி, கல்லூரி மாணவி, மனைவி என்று மூன்று கெட் அப்பில் நடிக்கிறேன். இப்போது மனைவியாக நடிப்பதால் இந்த வெயிட். உடலை குறைத்த பின், பள்ளி, கல்லூரி மாணவியாக நடிப்பேன். இந்தப் படம் எனக்கு சிறப்பான ரீ என்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன்.ஹோம்லியாக நடித்துவிட்டு திடீரென்று கிளாமர் கேரக்டரில் நடித்தது தவறு என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே?
அது எனக்கும் தெரியும். முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தேன். இருந்தாலும் நான் மாடர்ன் பெண். வெஸ்டர்ன் ஸ்டைல், பிகினி டிரஸ் இதுதான் எனது ஒரிஜினல். ஒரு நடிகையா எல்லா கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது தவறாக போயிவிட்டதாக நினைக்க வில்லை.
மீனாட்சி என்கிற பெயரை மாற்றாமல், பிங்கி சர்க்கார் என்கிற உங்களின் ஒரிஜினல் பெயரில் அறிமுகமாகி இருந்தால் பெரிய இடத்துக்கு வந்திருக்கலாம் என்று நினைத்ததுண்டா?அப்படி நினைக்கல. ஆனால், சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீனாட்சி என்ற பேரை நான் இப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். அது சக்தி வாய்ந்த கடவுளின் பெயர். இனி அந்தப் பெயரை மாற்ற மாட்டேன்.
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னார்களே?மூணு வருஷம் தொடர்பில் இல்லை என்றால் ஒரு நடிகை பற்றி இது போன்ற தகவல்கள் வருவது சகஜம்தான். இன்னும் நிறைய வந்திருக்கு. அதுவும் எனக்குத் தெரியும்.
சரி, எப்போது கல்யாணம்?இப்போதுதான் விழுந்து எழுந்து வந்து சேர்ந்திருக்கிறேன். அதற்குள் எப்படி கல்யாணம் பற்றி யோசிக்க முடியும்? என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி