ஐஸ்லாந்து நாடு திமிங்கலத்தை இறைச்சிக்காக வேட்டையாடுவதோடு ஜப்பான் போன்ற நாடுகள் திமிங்கல இறைச்சியை ஏற்றுமதி செய்து அதிகளவில் வர்த்தகம் செய்கிறது. இதை சர்வதேச வர்த்தக மையம் அடிக்கடி கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் ஐஸ்லாந்து இந்த வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டே இருப்பதால், நட்பு நாடாக இருப்பினும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒபாமா முடிவு செய்துள்ளார். ஐஸ்லாந்து மீது பொருளாதார தடை விதிக்க அவர் அதிரடியாக முடிவு செய்துள்ளார்.
திமிங்கலம் போன்ற கடல்வாழ் உயிரினங்களை இறைச்சிக்காக வேட்டையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க உள்துறை அமைச்சர்சாலி ஜுவல் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். ஐஸ்லாந்து நாட்டில் பொருளாதார தடையை அமல்படுத்துவதோடு, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளிலும் இதே போன்ற குற்றம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அந்த நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி