புதுமுகம் வேண்டாம் யாராவது முன்னணி நடிகையாக இருந்தல் பெட்டராக இருக்கும் என்று விஜய் ஆசைப்பட்டதால் கோச்சடையான் ஹீரோயின் தீபிகா படுகோனோவை கமிட் செய்ய திட்டமிட்டு வந்தார்கள்.அவர் கேட்ட ‘கோடி’ சம்பளத்தைக் கேட்டு ஆடிப்போன டைரக்டர் சிம்புதேவன் வேறு வழியில்லாமல் தற்போது அதே பாலிவுட்டிலிருந்து பிரியங்கா சோப்ராவை கமிட் செய்திருக்கிறார்.
அவருக்கு படத்தின் கதை பிடித்துப் போனது ஒரு பக்கம் இருந்தாலும் ஏற்கனவே தமிழன் படத்தில் அவர் விஜய்யுடன் நடித்திருந்தார். அதனால் நேர்மையான சம்பளத்தைக் கேட்டு அவரே படத்தில் நடிக்க ஓ.கே சொல்லி விட்டார்.ஹீரோயின் கிடைத்து விட்டதால் படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார் டைரக்டர் சிம்புதேவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி