இந்த படத்தில் கமலுக்கு இருபது வயது நிரம்பிய மகள் கேரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்கத்தான் சுருதி ஹாசனை அழைத்தனர்.இதில் நடிக்காதது குறித்து சுருதி ஹாசன் கூறியதாவது:–
எனது தந்தையுடன் நடிக்க அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. வேறு படங்களில் பிசியாக நடிப்பதால் தேதி ஒதுக்க முடியவில்லை. எனவே நடிக்க மறுத்து விட்டேன்.
கடந்த சில நாட்களாக ஒய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படம் முடிந்ததும் அடுத்த படம் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். என் சொந்த விஷயங்களை கூட கவனிக்க முடியவில்லை. தோழிகளிடமும் பேச முடியவில்லை. காதல் பற்றி கேட்கிறார்கள். எனக்கு காதலிக்க கூட நேரம் இல்லை.இவ்வாறு சுருதி ஹாசன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி