பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி ரூபாய்க்குள் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்த்த லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதை வாங்கி வெளியிட்டார்.அனைத்து உரிமைகளையும் இரண்டு கோடிக்கு வாங்கியதாக கூறுகிறார்கள். படத்தை வாங்கிய லிங்குசாமி பெரிய அளவில் விளம்பரம் செய்தார். முதலில் 180 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. தற்போது மீடியாக்கள் சைடிலிருந்தும், மவுத் டாக்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால் ஜனவரி 26 முதல் மேலும் 25 தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இதுதவிர 45 தியேட்டர்களில் காட்சிகளை அதிகப்படுத்தியும் உள்ளனர். அஜீத்தின் வீரம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் வீரத்தை நிறுத்தி விட்டு கோலி சோடாவை திரையிட ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கோடிக்கு மேல் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களிலும் வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிசோடா படக்குழுவினரும்,படத்தை வெளியிட்ட லிங்குசாமியும் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றனர். மேலும் இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகம் எடுக்க தயாராகிவருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி