தெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அவர் ஓய்வு பெற்ற தினத்தில் மத்திய அரசு இதை அறிவித்தது.
இதேபோல அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணி அளவில் நடந்தது.முதலில் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதை பெறும் 3–வது அறிவியல் விஞ்ஞானி ஆவார்.
இதைத்தொடர்நது தெண்டுல்கருக்கு ஜனாதிபதி பாரத ரத்னா விருதை வழங்கினார். பெருமைக்குரிய இந்த விருதை அவர் பெறும்போது மனைவி அஞ்சலியும், மகள் சாராவும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.பாரத ரத்னா விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை தெண்டுல்கர் பெற்றார். மேலும் குறைந்த வயதில் இந்த விருதை பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.40 வயதான தெண்டுல்கர் டெஸ்ட் (200), ஒருநாள் போட்டி (463) மற்றும் 20 ஓவர் போட்டியில் (ஒரே ஆட்டம்) சேர்த்து மொத்தம் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார்.1954–ம் ஆண்டு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக இந்துஸ்தானி இசைப் பாடகர் பீம்சென் ஜோஷி 2009–ம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்றார். இதுவரை 43 பேர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி