சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின்போது, மக்களவைத் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அறிவித்தார்.வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி பிறகு அறிவிக்கப்படும்.
அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகாஷ் காரத் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி