இந்த தகவலை திருப்பதியில் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாநாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், உளுந்தூர் பேட்டை மாநாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர் தக்க முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சேலத்தில் நடந்த மாநாட்டில் தொண்டர்களின் சம்மதம் பெற்றுதான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தற்போது கூட்டணி அமைப்பதற்கு முன்னர் தொண்டர்களின் கருத்துக்களை கேட்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
ஆயினும் பாரதிய ஜனதாவுடன் தேமுதிக கூட்டணி சேர அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பாரதிய ஜனதாவுடன் வைகோவின் மதிமுக, ராம்தாஸின் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தேமுதிகவும் அந்த கூட்டணியில் சேர்ந்தால், கூட்டணி வலுவடையும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி